ஒரு முறை திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவம் இது. அப்போது கடலூர் தொகுதியின் திமுக எம். எல்.ஏ ஆக இருந்த ஆதி.சங்கர் சட்டசபையில் இருந்து கருணாநிதி அவர்களால் வெளியேற்றப்பட்டார்.
கழகத்தின் கொள்கைகளுக்கு அவர் எதிராக நடந்துகொண்டார் என்று கண்டிக்கப்பட்டார். ஆதி.சங்கர், மன்னிப்பு கடிதம் தந்தே பிறகே அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இதற்க்கு காரணம் என்ன தெரியுமா?
ஆதி.சங்கர், அன்று சட்டசபைக்கு வரும்போது, அவர் தனது நெற்றியில் விபுதி குங்குமம் இட்டு இருந்தார் என்பதே.
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோது கருணாநிதி, இவ்வாறு பேசினார்.
"முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.
இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்".என்று "விளக்கம்" அளித்தார் அவர்.
ஆனால், அவர் அடிக்கடி பயன்படுத்தும் ஆர்யாள்,பார்ப்பனர் ஆகியோரிடமே இப்போது தஞ்சம் அடைந்து இருக்கிறார் "பகுத்தறிவு தந்தை".
திருநள்ளார் சனி பகவான் கோயிலில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.
இந்த பரிகாரங்களை முன்னின்று செய்தவர்கள் ...பார்ப்பனர்கள் அல்லது ஆரியர்களே.
கும்பகோணம் அருகே அய்யாவாடி பிரிதியங்கரா காளி கோயில் இருக்கிறது. பண்டைய காலத்தில் சோழ மன்னர்கள், போர்களத்திற்கு செல்லும்முன் அங்கு சென்று யாகம் செய்துவிட்டு வருவார்கள். ஜெயலலிதா அவர்கள் இந்த யாகத்தை வெளிப்படையாக செய்து வருகிறார்.
ஆனால், மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் அங்கு சென்று யாகம் செய்து வருகிறார்கள் ரகசியமாய். இந்த முறையும் அவ்வாறே அங்கு சென்று யாகம் செய்து இருக்கிறார்கள்.
இங்கும் யாகத்தை நடத்தியவர்கள்.....பார்ப்பனர்களே.
திராவிட கழக கி.வீரமணி ஏன் இதற்கெல்லாம் கருத்து தெரிவிக்கவில்லை. சுயமரியாதை,பகுத்தறிவு போன்றவை எல்லாம் இவர்களுக்கு அரசியல் வியாபாரம் என்பதற்கு இதை விட சிறந்த உதாரணங்கள் உண்டா??
சமிபத்தில், பத்திரிக்கையாளர் பேட்டியில், "ஸ்டாலினை அடுத்த தலைவராக திமுகவில் அனைவரும் ஏற்பார்களா?" என்ற கேள்விக்கு, கருணாநிதி அளித்த பதில்,
"இது. அதாவது மடாதிபதிகள் நடத்துகின்ற மடம் அல்ல இது. மடாதிபதி என்றால், உதாரணம் சொல்ல வேண்டுமேயானால் சங்கரமடம் இருக்கிறது அல்லவா, அந்த மடத்திலே பெரியவர் சங்கராச்சாரியார் இருந்து, தனக்கு பின்னர் இவர் தான் என்று ஒருவரை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதை அந்த மடத்தை சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டார்கள். அதைப் போல திராவிட முன்னேற்ற கழகம் ஒரு மத ஸ்தாபனம் அல்ல. இது ஜனநாயகரீதியான ஸ்தாபனம். ஜனநாயகத்தில் தலைவர்களை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதை போல தான் இயக்கத் தோழர்கள், கழகச் செயலாளர்கள் எல்லாம் சேர்ந்து இவர் இந்தப் பொறுப்பு வகிக்க தகுதியானவர் என்று கருதினால் அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள்".
இந்த தருணத்தில் யாராவது, சங்கர மடத்திற்கு சென்று, ஜெயேந்திரர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால், தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பார் என்று ஆருடம் சொன்னால் , ராவோடு ராவாக அதையும் செய்ய பெரியாரின் சீடர்கள் தயாராக இருக்கிறார்கள். ஆருடம் சொல்ல தான் ஆள் இல்லை !
நன்றி - இட்லி வடை
Sunday, April 03, 2011
Friday, April 01, 2011
நல்ல வரலாறு படைப்போம்!
தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க!
ஓட்டு எந்திரத்திற்கு (அட நம்ம வாக்காளர்கள்தான்..) ஒரு சின்ன தகவல்..
குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை, சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது.
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது(2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது..
இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது.
ஏனென்றால்,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்).
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது.
இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும்...
குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை- ரூ.50,000 கோடிகள்.
(ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான்!)
ஆனால்... இன்று..
அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள்.
மீண்டும் உங்கள் நினைவிற்கு..
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது,
ஓட்டுக்கு பணம் கிடையாது.
டாஸ்மாக் கிடையாது(மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம்) .
கரண்ட் கட் கிடையாது.
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ,பங்கோ கிடையாது
- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது.
-இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது.
-இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன.
இந்தியாவின் No-1 மாநிலம்(தொழில்,பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கை தரம்,உள்கட்டமைப்பு,வருமானம்,சட்டம்/ஒழுங்கு)
நாமும் No-1 தான் (இலவசங்களை வாங்கி, ஓட்டுக்கு பணம் வாங்கி,உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்)
அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது.
நம் மாநிலத்தின் நிலை??
அடுத்த 5 ஆண்டுகளில் கருணாநிதியின் குடும்பம் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடும்.
இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல..
மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும்.
இது அநியாய,அராஜக ஆட்சிக்கு நாம் அளிக்கும் சம்மட்டி அடியாக இருக்க வேண்டும்.
இதில் நாம் தவறிழைத்தாலோ,அடிபணிந்தாலோ,ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம்.
உலகம் நம்மை காரி உமிழும்.
இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல்(Forward) செய்யவும்.
நல்ல வரலாறு படைப்போம்.நன்றி!

Saturday, March 05, 2011
ஏன் தொடங்கினார் எம்.ஜி.ஆர்!
ஞாநி
அ.தி.மு.க. பிரமுகர் சேகர்பாபு தி.மு.கவில் தம் ஆதரவாளர்களுடன் இணைந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, கலைஞர் கருணாநிதி, “எம்.ஜி.ஆர் என்ன நோக்கத்துக்காக அ.தி.மு.க.வைத் தொடங்கினாரோ அதிலிருந்து அது விலகிப் போய்விட்டது. இதைத் தாமதமாக உணர்ந்தாலும், உறுதியான முடிவு எடுத்து இப்போது சேகர்பாபு அதிலிருந்து விலகி நம்மிடம் வந்திருக்கிறார்” என்று பேசியிருக்கிறார்.
இப்படி விசித்திரமான கருத்துகளை, வரலாறு தெரியாத ஒரு தலைமுறையைக் குழப்பும் விதத்தில் விதைப்பது கருணாநிதி தொடர்ந்து பின்பற்றி வரும் சாமர்த்தியமான உத்தி.
என்ன நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர்., அ.தி. மு.க.வைத் தொடங்கினார்; அதிலிருந்து எப்படி அ.தி.மு.க. விலகிவிட்டது என்பதை மட்டும் கருணாநிதி எச்சரிக்கையாகச் சொல்லாமல் விட்டு விட்டார். அது என்ன என்று தெரியாதவர்கள், எம்.ஜி.ஆர். ஏதோ உன்னதமான சமூகக் கொள்கைகளைத் தூக்கிப் பிடிக்க கட்சி தொடங்கியதாகவும், அதிலிருந்து அந்தக் கட்சி விலகிவிட்ட தாகவும் அந்த மேன்மை யான கொள்கைகளை எல் லாம் தொடர்ந்து நிறை வேற்றுவது, தி.மு.க.தான் என்றும் மயக்கம் கொள்ள வைப்பதே கருணாநிதியின் நோக்கம்.
உண்மையில் ஏன் எம்.ஜி.ஆர் முப்பத்தெட்டு வருடங்களுக்கு முன்னால் அ.தி.மு.க.வைத் தொடங்கி னார் என்ற காரணங்கள் இப்போது ஐம்பத்தைந்து வயதைக் கடந்தவர்களுக்கு மட்டுமே நினைவில் இருக் கும் வாய்ப்பு இருக்கிறது. அடுத்தடுத்த தலைமுறைகளைக் குழப்புவதற்காகவே கருணாநிதி இப்படிப் பேசியிருக்கிறார் என்பதில் சந்தேக மில்லை.
கருணாநிதி என்ற தீய சக்தியை அரசியலிலிருந்து அகற்றவும், அண்ணா உருவாக்கிய தி.மு.க.வின் அசல் நோக்கங்களைக் காப்பாற்றவும்தான், அ.தி.மு.க.வைத் தாம் தொடங்கியதாக 1972லிருந்து 1987ல் அவர் இறக்கும்வரை, எம்.ஜி.ஆர் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். இறக்கும் வரையில் கருணாநிதியால் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கவே முடியவில்லை என்பதும் இன்னொரு முக்கிய வரலாற்றுச் செய்தி.
1972ல் எம்.ஜி.ஆர் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியுடன் கருணாநிதிக்கும் அவரது ஆட்சிக்கும் எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை ஆளுநரிடம் அளித்தார். அவற்றுக்கெல்லாம் சட்டமன்றத் தில் கருணாநிதி அளித்த மழுப்பலான பதில்களை அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு ஏற்கவில்லை. பிரதமர் இந்திரா காந்தி நீதிபதி சர்க்காரியா கமிஷனை நியமித்து ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கச் செய் தார். சர்க்காரியா கமிஷன், கருணாநிதி அரசு ஊழல்களைச் செய்திருப்பதாகத் தெளிவாக அறிவித்தது. அதன் அடிப்படையில் கருணாநிதி மீதும் அவரது சகாக்கள் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்குகளைத் திரும்பப் பெறச் செய்ய, கருணாநிதி படாத பாடுபட்டார். அப்போது அவரது கூட்டாளியாக இருந்த ஜனதா கட்சி ஆட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் வழக்குகளைத் திரும்பப் பெற மறுத்துவிட்டார். வழக்குப் போட்ட இந்திரா காந்தி காலிலேயே மறுபடியும் விழுந்துதான் கருணாநிதி அந்த வழக்குகளைத் தொடர விடாமல் தப்பிக்க முடிந்தது. இந்தச் சரித்திரமெல்லாம் நன்றாகத் தெரிந்த காங்கிரஸ்காரர்கள்தான் ப.சிதம்பரமும், தங்கபாலுவும்.
1980ல் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி உருவாக்கப்பட்டு எம்.பி.தேர்தலில் ஜெயித்த பின்னர், எம்.ஜி.ஆர். அரசைக் கலைக்கும்படி இந்திராவை கருணாநிதி தான் வற்புறுத்தினார். 356ஆம் பிரிவின் கீழ் மாநில அரசைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு இருக்கக்கூடாது என்று தி.மு.க அரசு கலைக்கப்படும்போதெல் லாம் சத்தம் போடும் கருணாநிதி, அதே 356ஐ எம்.ஜி.ஆருக்கு எதிராகப் பயன்படுத் தத் தயங்கவே இல்லை.
ஆனால், எம்.ஜி.ஆர். ஆட்சிக் கலைப்புக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் அணி படு தோல்வி அடைந்தது. அதன் பின்னர் காங்கிரஸ் அ.தி.மு.க. பக்கம் போய்விட்டது. அடுத்த 13 வருடங்கள் அ.தி.மு.க.வுடன்தான் இருந்தது.
அப்போது சர்க்காரியா கமிஷன் தொடர்பான ஊழல் வழக்குகளிலிருந்து தப்பிக்க காங்கிரஸிடம் சரணாகதி அடைந்த கருணாநிதி, இப்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தம் குடும்பத்தினரும் மாட்டி விடாமல் தடுப்பதற்கு காங்கிரஸிடம் சரணாகதி அடையும் நிலையில் இருக்கிறார்.
அதிக இடங்கள் தேவை, ஜெயித்தால் கூட்டணி ஆட்சி; ஆட்சியில் காங்கிரஸுக்கும் பங்கு;
துணை முதல்வர் பதவி உண்டு என்ற கோரிக்கைகளை இப்போது காங்கிரஸ் வலியுறுத்தி, பேரம் பேசிக் கொண்டிருக்கிறதல்லவா? இதே பேரத்தை 1980லும் பேசியது. அப்போது அத்தனை கோரிக்கைகளையும் ஒப்புக்கொண்டு, காங்கிரசுடன் சேர்ந்து குறைந்தபட்ச பொதுத் திட்டம் என்ற பெயரில் ஒரு கூட்டுத் தேர்தல் அறிக்கையையும் கருணாநிதி வெளியிட்டார். கூட்டணி ஜெயித்தால் முதல்வர் பதவியும் தி.மு.க.வுக்கு இல்லாமற் போய்விடுமோ என்ற அளவுக்கு தி.மு.க.வினருக்கு அப்போது பயம் இருந்தது.
இந்திராவே பகிரங்கமாக, நாங்கள் ஜெயித்தால் கருணாநிதிதான் முதல்வர் என்று அறிவித்தார். ஆனாலும் ஜெயிக்கவில்லை; காரணம் எமெர்ஜென்ஸி ஒடுக்குமுறைகளில் அல்லற்பட்டிருந்த தி.மு.க. தொண்டர்கள் காங்கிரஸ் உறவை விரும்பவில்லை. எம்.ஜி.ஆரை வைத்து தி.மு.க.வை உடைத்த நாம், ஏன் திரும்ப தி.மு.க.வுக்கு உயிர் தரவேண்டும் என்ற அதிருப்தி காங்கிரஸாருக்கு இருந்தது. ஒரே அணியில் இருந்துகொண்டு விரோத மனநிலையில் வேலை செய்தார்கள். எம்.ஜி.ஆர். அரசை டிஸ்மிஸ் செய்தது அவருக்குப் பெரும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.
இப்போதும் அதே போன்ற சூழ்நிலைகள் நிலவுகின்றன. கூட்டணி என்றும் பாராமல் ராசாவைக் கைது செய்து காங்கிரஸ் ஆட்சி சிறையில் அடைத்திருப்பது தி.மு.க.வினர் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒழுக்க சீலர் என்ற பிம்பத்துடன் வலம்வந்த மன்மோகன் ஆட்சிக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை முன்னின்று நடத்தியிருக்கும் தி.மு.க.வை நாம் ஏன் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற எரிச்சல் காங்கிரஸாரிடம் இருக்கிறது.
வீரமணி, விடுக்கும் வீராப்பான அறிக்கையின் அடிப்படையில் காங்கிரஸை உதறிவிட்டு வரும் நிலையில் நிச்சயம் தி.மு.க. இல்லை. காங்கிரஸைப் பொறுத்தமட்டில் கூடுதலாக பத்து சீட் கொடுக்க தி.மு.க. முன்வந்தாலும்கூட லாபம்தான். தேர்தலுக்குப் பின் இழுபறி நிலை ஏற்பட்டால், அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேரவும் காங்கிரஸ் தயங்கப் போவதில்லை. தி.மு.க. இப்போது குடும் பச் சண்டையாலும் ஸ்பெக்ட்ரம் நெருப் பாலும் எரிகிற வீடு. அதில் பிடுங்கினவரை லாபம் என்பதே காங்கிரஸின் அணுகுமுறை.
தி.மு.க.வுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘தருமம் தலைகாக்கும்’ என்பதுதான். அரசு கஜானாவிலிருந்து அள்ளி அள்ளி வீசி இலவசம் என்ற பெயரில் செய்திருக்கும் ‘தானதர்மங்கள்’, இனி தேர்தல் நேரத்தில் செய்யப்போகும் ‘தர்மங்கள்’ எல்லாம்தான் தங்களைக் கரையேற்றும் என்று அது நம்பிக் கொண்டிருக்கிறது.
எப்படிப் பார்த்தாலும், எந்த நோக்கத்துக்காக எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவைத் தொடங்கினாரோ அந்த நோக்கம் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை. இந்தத் தேர்தல்தான் அதை இறுதியாகத் தீர்மானிக்கப் போகிறது. எம்.ஜி.ஆரின் கனவை ஜெயலலிதா சாதிப்பாரா, அல்லது எம்.ஜி.ஆரின் கனவு கனவாகவே போய்விடுமா என்பது தீர்மானிக்கப்படும்.

Sunday, December 12, 2010
ஓ பக்கங்கள்!!!!!!!!!!!!!!!!!!
ஓ பக்கங்கள்
ஞாநி
தனிமையிலே ‘இனிமை’ காணமுடியுமா?
ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் முறை கேட்டை ஆ.ராசாவால் தனியாகச் செய்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன். முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் நினைக்கிறார் என்று இப்போது தெரியவந்திருப்பது எனக்குப் புல்லரிக்கிறது. இப்படி ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு முன்பு யாரும் கொடுத்ததில்லை.
‘இளைஞன்’ பட விழாவில் பேசிய கருணாநிதி, ஊமைப்படக் காலத்தில் பகாசுரன் வதைக் காட்சிகளை தாம் பார்த்தபோது எப்படி அசுரனைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் சொல்லப்பட்டன என்று விவரித்துவிட்டு, அதேபோல ஒரு தனி நபர் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய்களைத் தனியாக அபகரித்திருக்க முடியுமா என்று சிந்திக்காமல், படித்தவர்களும் நம்புகிறார்களே என்று கேட்டிருக்கிறார்.
அடுத்தபடி அவர் சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் உளவியலில் ஃப்ராய்டியன் ஸ்லிப் என்பார்கள். தன்னையறியாமலே அடி மனத்தில் இருக்கும் உண்மையை உளறிவிடுவதுதான் அது. “எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால் அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்யமுடியும். ‘எந்திரன்’ படத்தில் ரஜினி எப்படி ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப்போல செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்யமுடியாது என்பதை அறிவுபூர்வமாக இன்றைக்கு உணர்கிறோம்,” என்கிறார் கருணாநிதி!
புராண பகாசுரன் வேலைகளை இன்று விஞ்ஞான பூர்வமாகச் செய்ய முடியும் என்று கருணாநிதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்பவர் என்று 35 வருடங்களுக்கு முன்பே நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் அவர்!
ராசாவோடு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாராக இருக்கும் என்று யூகிக்கும் வசதியை, நமக்கு நீரா ராடியா டேப்கள் அளிக்கின்றன. அவற்றைப் பற்றி ஒருபோதும் கருணாநிதி ஒரு வார்த்தை கூட சொல்லப்போவதே இல்லை.
தி.மு.க. சம்பந்தப்பட்ட முறைகேடு ஸ்பெக்ட்ரம் என்பது மட்டும் அல்ல. பல ஊழல்களில் அது ஒன்று. மிகப் பெரும் தொகைகளும், மிகப் பெரிய சூழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.
ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும் தொடர்புடைய இன்னொரு மிகப் பெரும் முறை கேடினை தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராசா டெலிகாம் அமைச்சராவதற்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் பாலு இருந்தார். இருவர் கீழு மாக ஏழு வருடங்கள் அந்த அமைச்சகம் இருந்திருக்கிறது.
புதிய தொழில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரும்போது அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மதிப்பிட்டுவிட்டு அனுமதி தருவதும்/ மறுப்பதும் அமைச்சகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அதற்கு முன்பு 20 வருடங்களில் நான்காயிரம் தொழில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் பாலு, ராசா இருந்த சமயத்தில் மாதம் 100 திட்டங்களுக்கு க்ளியரன்ஸ்...! இரண்டே வருடங்களில் 2000 திட்டங்களுக்கு ஒப்புதல்.
ராசாவின் தனிச் செயலாளராக இருந்து இப்போது விசாரிக்கப்படும் ஆர்.கே.சந்தோலியா, முதலில் அவருடன் சுற்றுச் சூழல் துறையில் இருந்தவர். ராசா- நீரா ராடியா நட்பு அப்போதுதான் ஆரம் பம். நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராசாத்தி அம்மாள், அவர் ஆடிட்டர் ரத்தினம் ஆகியோரின் நட்பு எல்லாம் ராடியாவுக்கு ஏற்படுவதற்கான வித்து, சுற்றுச் சூழல் துறையில் தொடங்குகிறது.
பாலு-ராசா ஆட்சியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கைகள் தருவதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் கூறுகின்றன. சூழல் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான குழு உறுப்பினர்களாக, தமிழ்நாட்டிலிருந்து தமக்கு வேண்டியவர்களையே ராசா நியமித்த தாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
பாலு காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் நடத்தைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. இவற்றை வகுப்பதில் தொழில் அதிபர்களுக்குச் சாதகமாக, பல முறைகேடுகளை பாலு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நடத்தைக் கோட்பாட்டை மீறினால் தண்டனை எதுவும் இல்லை. அது சுயக்கட்டுப்பாட்டுக் கோட்பாடு அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைவிடப் பல மடங்கு அதிகமான பாதிப்பை சுற்றுச்சூழல் துறையில் நாட்டுக்கு தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெஹல்கா குற்றம் சாட்டியிருக்கிறது.
மன்மோகன்சிங் இரண்டாம் முறை பிரதமரானபோது பாலு, ராசா இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இது தயாநிதி மாறனின் விஷமப் பிரசாரம் என்று நீரா ராடியாவிடம் கனிமொழி சொல்கிறார். மாறனையும் பாலுவையும்தான் மன்மோகன் விரும்பவில்லை என்பது அவர் தரப்பு வாதம்.
ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் பாலுவை அடுத்த முறை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டதுதான். ராசா ஒரு வழியாக விலகியதும் அந்தத் துறையை எந்த தி.மு.க. காரரிடமும் ஒப்படைக்காமல் தம் கட்சிக்காரரிடமே கொடுக்க முடிந்ததுதான்.
காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசால் தன் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது போல, தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காரணம் கருணாநிதி சொன்னதாகத்தான் இருக்க முடியும்.“யாரும் தனி மனிதனாக அவ்வளவு பெரிய தொகையை எல்லாம் அபகரித்துவிட முடியாது” என்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாக உதிர்ந்த பொன்மொழியாக இருக்க வேண்டும்! இந்தப் பகுத்தறிவு முடிவிலிருந்துதான் கூட்டணி தர்மம் என்ற கோட்பாடே உருவாகியிருக்க முடியும்.
கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காங்கிரஸ் மகா ராஷ்டிரத்தில் தம் முதலமைச்சரை ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலுக்காக விலக வைத்ததுபோல, தமிழகத்தில் கருணாநிதியை வீட்டு வசதி வாரிய ஊழலுக்காக விலகச் சொல்லலாம். ம்ஹூம் முடியாது. கருணாநிதி கூட்டணி தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். அதனால்தான் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு முறைகேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் உரிய பங்கு கொடுத்துவிடுகிறார். சென்னையில் சொந்த வீடு இருக்கும் காங்கிரஸ் பெண் எம்.எல். ஏ.வுக்கு, விதிகளை மீறி வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்படுகிறது.
தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் வெளிக் கொணர்ந்திருக்கும் இந்தத் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன..... என்று சொல்லமாட்டேன். இந்த ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் நமக்கு அதிர்ச்சி.
கருணாநிதி ஆட்சியில் சமூக சேவகர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக எகிறிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் சமூக சேவகராம். உடனே வீடு ஒதுக்கீடு. ஓர் அமைச்சரின் மருமகள், பேத்தி எல்லோரும் சமூக சேவகர்கள்! சட்ட மன்ற தி.மு.க. கொறடாவின் மனைவி சமூக சேவகி! முதல்வரின் செயலாளர் மகள் சமூக சேவகி! ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன், ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் எல்லோரும் சமூக சேவகர்கள்!! முதலமைச் சருக்கு செக்யூரிட்டி வேலை செய்தால் அவர்கள் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்!”
இப்படிக் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டு மனை, வீடுகளை கருணா நிதியின் அரசு, தமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகித்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் மும்பையின் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் ஜுஜூபி.
ஆனால், தான் ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து, ஏழைகளோடே பழகி ஏழைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன் என்று கூசாமல் பேசுகிறார் கருணாநிதி.
சொத்துக் கணக்கு கேட்டால், உடனே தான் ஒன்றும் ஏழையாகப் பிறக்கவில்லை என்றும் அந்தக் காலத்திலேயே பக்கத்து ஊர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் வசதியுடன் பிறந்ததாகவும் சொல்லிக் கொள்கிறார்.
கருணாநிதியின் சமீப பேச்சுகள் ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஆறு கோடி ரூபாய்தானாம். அப்படியானால் எப்படி அவர் மகன் அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடியாக ஆயிற்று? ஸ்டாலினின் சொத்து மதிப்பு 13 கோடியாயிற்று? இருவரும் படித்த காலத்திலிருந்து ஒரு வேலைகூட பார்த்ததில்லை. எங்கேயும் பெரிய சம்பளம் வாங்கியதில்லை. என்ன தொழில் செய்தார்கள்? முதலீடுகள் எங்கிருந்து வந்தன? கனி மொழிக்குச் சொத்து மதிப்பு எப்படி 8 கோடி 45 லட்சம் ஆயிற்று? அவர் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் என்ன? பாட்ஷா, அண்ணாமலை, சிவாஜி, எந்திரன் வசனகர்த்தாக்களுக்குத் தருவதைவிடப் பல மடங்கு அதிகமாக வசனகர்த்தா கருணாநிதிக்கு 50 லட்சம் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கனிமொழியின் கவிதைக்கு 5 லட்சம் யாராவது தருகிறார்களா என்ன? கருணாநிதியின் பேரன்கள் எல்லாம் கல்லூரியிலிருந்து வந்த உடனே கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்... எப்படி?
கருணாநிதி எழுதவேண்டிய அடுத்த புத்தகம்: ‘நூறே நாட்களில் கோடீஸ்வரனாவது எப்படி?’ தனியே தன்னந்தனியே ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தை உருவாக்கிய அந்தச் சாதனை ரகசியத்தை மட்டும் தமிழக மக்களுக்கு அவர் தெரிவித்துவிட்டால், உலகம் அழியும்வரை அவருக்கு நன்றி விசுவாசத்தோடு அத்தனை தமிழர்களும் இருப்பார்கள்.

Saturday, April 17, 2010
உலக தமிழ் செம்மொழி மாநாடு!!! யாருக்கு லாபம் - தமிழுக்கா - நடதுபவருக்கா - மக்களுக்கா ???
கடந்த நான்கு , ஐந்து மாதங்களாக கோவை முழுவதும் மாநாட்டிற்கான பணிகள் நடந்து வருகின்றன , இல்லை தவழ்ந்து வருகின்றன.... சமிபத்தில் ஒரு பிரபலமான வார இதழை படித்து கொண்டு இருந்த போது, சிறிதும் மனசாட்சி இல்லாமல் , அந்த பணிகள் பற்றி எழுதி இருந்தார்கள்... அமைச்சர்கள் பேட்டியும் வேறு. அனைவரும் வழக்கம் போல் முதல்வரை புகழ்ந்து தள்ளி இருந்தார்கள்.. பத்திரிக்கைகள் ஜால்ரா அடிப்பதை நிறுத்தினால் தான் , மாற்றம் வரும்.. அங்கு உண்மையாக அப்படி நடக்கிறதா என்றால், இல்லை- சாதாரண மக்கள் சிரிப்பார்கள்... இந்த மாநாட்டினால் , சாலை ஓரத்தில் இருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டு விட்டன.. பெயருக்காக சாலை ஓர பூங்கா அமைத்தார்கள்... கவனிப்பாரின்றி அது சேதம் அடைந்து வருகிறது.... இருந்தாலும் அனைத்தும் சரி செய்யப்படும், அதுவும் மாநாடு நடக்கும் சமயம் மட்டும்... இதற்காகவா கோடிகளை இரைகிறார்கள். ஒருவரது விருப்பத்திற்காக மக்களின் கோடி கணக்கான பணம் விரயம் செய்ய படுகிறது..... இதனால் தமிழ் வளரும் என்றால் சிரிப்பு தான் வருகிறது.... முன்பே மக்கள் கடும் வெயிலால் வாடுகிற போது, மரங்களை வெட்டு வது சரியா??? பெங்களுருவில் மரங்களை வெட்டாமல் போக்குவரத்தை சரி செய்யும் போது , அனைத்திலும் பெங்களுருவரை விட சிறிய கோவையில் செய்வது சிரமமா???? கடைசியில் , உலக செம்மொழி மாநாட்டை நடத்தி காட்டியதற்காக, " உலக செம்மொழி சுடர் " விருது சிலருக்கு வழங்க படும்... அப்பாவி மக்கள் மட்டும் அனைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்கள்... மாநாடு நடக்கும் சமயம் அங்கு திருமணம் நடை பெறுவதற்கு மறைமுக தடை விதிக்க பட்டு இருக்கிறது... கண்டிப்பாக இவர்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றாக அனுபவிப்பார்கள்......
Saturday, February 13, 2010
மக்களுக்காக தாவிய இன்னொரு ச ம உ !!!

நான்கு வருடங்கள் சும்மா இருந்து விட்டு இப்பொழுது மக்களுக்காக மனு கொடுக்க வந்தவர் இவ்வளவு நாள் என்ன செய்து கொண்டு இருந்தார்!!" முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பார்கள்" !!! இன்று திராவிட முன்னேற்ற கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமை பின்னாளில் அவர்களுக்கு வராது என்று எந்த உத்திரவாதம் இல்லை... இவரை போன்றவர்களை மக்களாகிய நாம் தான் விரட்டி அடிக்க வேண்டும் , ஓட்டின் வாயிலாகா.. தவறு திராவிட முன்னேற்ற கழகத்தில் இல்லை ... இவர்களை போன்ற சில சந்தற்பவாதிகளால் தான்.... சந்தர்பவாதத்தை நாம் ஊக்குவிக்காமல் இருத்தல் வேண்டும்....
IPL not in Andhra!!! Is this a right move!!!
Modi has announced today that IPL matches will not be played in Andhra Pradesh. He is acting like a dictator by taking decision on his own. Why he didnt discuss with the Govt in Andhra pradesh about the security measures before taking this decision. If he himself is not satisfied with the security measures then how come he can expect foreign players to feel safe playing India. Let him not allowed to take decision like this. BCCI should be blamed for all these controversies.
Subscribe to:
Posts (Atom)